மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாயமான 17 வயது சிறுமியின் சடலம் கிணற்றில் மீட்பு; வேலூரில் பெற்றோர் கண்ணீர்..!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கல்லேரி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவர் கூலித்தொழிலாளி ஆவார். சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன், மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
17 வயதுடைய மகள் அனிதா குடியாத்தத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அவர் திடீரென மாயமான நிலையில், குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதனால் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று அங்குள்ள கல்லேரி பகுதியில் இருக்கும் நாராயணசாமி என்பவரின் விவசாய கிணற்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.