மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. சாலை வசதியின்றி பிரசவ வலியோடு 15 கி.மீ நடந்தே சென்ற கர்ப்பிணி.! வேலூரில் அவலம்.!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்தன் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரின் மனைவி சிவகாமி (வயது 22). தம்பதிகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சிவகாமிக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லை என்பதால், அவரின் உறவினர்கள் சிவகாமியை நடைபயணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மற்றொரு மலை கிராமம் வழியே பிரசவ வலியோடு சிவகாமி நடந்து சென்று, பின் ஆட்டோ மூலமாக பாகாயத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது கிராமத்திற்க சாலை வசதி செய்து தர வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.