#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மோதலை தட்டிக்கேட்க சென்ற உறவினர்கள் கண்முன் சம்பவம்.. தந்தை, மகன் வெறிச்செயல்..!
புத்தாண்டன்று நடந்த கொண்டாட்ட தகராறில் மெக்கானிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கார்கூர் கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினோத் (வயது 23). வினோத் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், புத்தாண்டையொட்டி ஊருக்கு வந்த வினோத், நேற்று முன்தினம் இரவு தனது கிராம இளைஞர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வினோத்திற்கும் - அதே கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் அசோகன் என்ற 44 வயது நபரின் மகன் ஆகாஷ் என்ற 23 வயது இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் வினோத்தின் உறவினர்களுக்கு தெரியவரவே, அவர்கள் வினோத்துடன் ஆகாஷின் இல்லத்திற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது, வீட்டிற்குள் இருந்து வந்த ஆகாஷின் தந்தை அசோகன் பதில் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஆத்திரம் முற்றி வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து வினோத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த வினோத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வினோத் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வினோத்தை கொலை செய்ததாக அசோகன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.