மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுவன் பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை; கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் அதிர்ச்சி செயல்.! வேலூரில் பகீர்.!
தான் நண்பர்களுடன் சேர்ந்து பிரீ பயர் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால், மகன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாலம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவரின் மனைவி கீதா. தம்பதிகளுக்கு 14 வயதுடைய தாமு என்ற மகன் இருக்கிறார்.
இவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், செல்போனுக்கு அடிமையாக இருந்த தாமு, எப்போதும் செல்போன் வைத்து கேம் விளையாடி வந்துள்ளார்.
குறிப்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரீ பயர் விளையாடியதாக தெரியவருகிறது. இதனைகவனித்த தாமுவின் தாய் கீதா கண்டித்து இருக்கிறார். தாயின் கண்டிப்பை கண்டுகொள்ளாத தாமு, தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
நேற்று இரவிலும் தாமு செல்போனில் கேம் விளையாட, அதனை கீதா கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட தாமு மொட்டை மாடிக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
சந்தேகமடைந்த தாய் மாடிக்கு சென்று பார்த்தபோது, மகன் பிளேடால் கழுத்தை அறுத்து இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.