மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வேலூர் : ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியால் பிளந்த பெருசு.. பகீர் காரணத்தால்.. அதிர்ந்த போலீசார்.!
மது பிரியர்கள் பலரும் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் கூட எப்படியாவது அன்றாடம் குடிக்க வேண்டும் என்று பணத்திற்காக வித விதமான செயல்களில் ஈடுபடும் சம்பவத்தை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம்.
தண்டவாளத்தை திருடி விற்று குடிப்பது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது மனைவியின் உழைப்பை அடித்து பிடுங்கி வாங்கிச் சென்று மதுபான கடைகளில் கொடுத்து குடிப்பது என்று படுமோசமான செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளை அடித்து குடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊசூர் பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியை எடுத்து அடித்து நொறுக்கி இருக்கிறார் அந்த முதியவர்.
காலை 9 மணி அளவில் அரங்கேறிய இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் உடனடியாக விரைந்து வந்து கந்தசாமி என்ற அந்த முதியவரை பிடித்து விசாரணை செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மது குடிக்க பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சித்ததாக முதியவர் ஒப்பு கொண்டுள்ளார்.