மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடி தீர்ப்பு... 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... மதுரை இளைஞருக்கு கடும் தண்டனை.!
போக்சோ வழக்கில் மதுரையைச் சேர்ந்த இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த அதிரடி தீர்ப்பை திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த நாகராஜன்மகன் செல்வம் கடந்த 2020 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ராமராஜபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற போது தனது உறவினர் மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து சாட்சியங்களையும் விசாரணை செய்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில் செல்வம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 23 ஆண்டுகால சிறை தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரன் தீர்ப்பளித்தார்.