மக்களே அச்சம் வேண்டாம்.! கூடுவாஞ்சேரி பகுதியில் தண்ணீரில் மிதந்தது முதலை இல்லை.! கலெக்டர் கொடுத்த விளக்கம்



Video of the crocodile spreading in kooduvancheri

தமிழகத்தில் சமீப காலமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சாலையில் முதலை வந்ததாக வெளியான வீடியோ தவறானது. சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை ஒன்று மிதந்தை முதலை என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.