திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மிக விரைவில்.! விஜயின் அடுத்த கட்ட திட்டம்.!
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் 600 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இன்றளவும் அந்த திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே விஜய் மக்கள் இயக்கத்தை விரிவு படுத்த அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
விஜய் மக்கள் இயக்கத்தில், மருத்துவரணி, வழக்கறிஞரணி, மகளிரணி, இளைஞரணி மேலும் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா என்று அனைவருக்கும் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.
மேலும் விஜய் இலவச பயிலகம், இலவச மருந்தகம், இலவச சட்ட மையம் போன்ற அமைப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளிலும், மிக விரைவில் தளபதி விஜய் நூலகம் தொடங்கப்படவிருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. அனைத்து நூலகங்களுக்கும் தேவைப்படும் புத்தகங்கள் அனைத்தும் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.