மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபாயம்! இது தமிழ்நாடா..? இல்லை... பரபரப்பை கிளப்பிய விஜய் சேதுபதி ரசிகர்கள்.! தீயாய் பரவும் போஸ்டர்!!
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பல டாப் நடிகர்களின் படங்களில் மிரட்டி வருகிறார். விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்வது அதிகரித்து வருகிறது. அண்மையில் வட மாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோவும் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் மதுரையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் அடித்த போஸ்டர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், அபாயம்! இது தமிழ்நாடா? இல்லை வடநாடா? விழித்துக்கொள் தமிழா... வருங்காலம் வட மாநிலத்தவர்க்கா..? என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.