திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடல்நலம் குணமாகி இந்தியா திரும்பிய விஜயகாந்த்! அவருக்கு காத்திருந்த சோகம்!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் விஜயகாந்த். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். உடனிருந்து அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.
இதனைத் தொடா்ந்து அவருடைய அரசியல் பொறுப்புகளை தற்சமயம் ஏற்றுள்ள அவரது மகன் விஜய பிரபாகரன் தே.மு.தி.க. தொடர்பான முக்கிய கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்ததும் இந்தியா திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இடையில் அவ்வபோது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் மீண்டும் சில மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு அமெரிக்காவுக்கு மனைவி பிரேமலதா உடன் சென்றார். தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று, சிறுநீரகப் பிரச்னைகளுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தே.மு.தி.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி முதல்வாரத்தில் விஜயகாந்த் சென்னை திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவரை காண்பதற்கு ஏராளமான தொண்டர்கள் காத்திருந்தனர். விஜயகாந்த் புல்வாமாக பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். விஜயகாந்த் இரங்கல் தெரிவித்ததை அடுத்து அவரின் தொண்டர்களும் கண்ணீருடன் இரங்கலை தெரிவித்தனர்.