மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயகாந்த் மறைந்த துக்கம் தாளாது தொண்டர் மாரடைப்பால் உயிரிழப்பு.. சோகத்தில் குடும்பத்தினர்.!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சார்ந்த தேமுதிக கட்சி நிர்வாகிகள் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அச்சமயம் விஜயகாந்தின் ரசிகரும், தேமுதிக 15-வது வார்டு துணைச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகியான மோகன் (வயது 52) என்பவரும் நிகழ்விடத்தில் இருந்துள்ளார்.
இவர் முன்னதாகவே விஜயகாந்தின் மரண செய்தியைக்கேட்டு துக்கத்தில் இருந்த நிலையில், அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டிற்கு சென்ற சிறிதுநேரத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவர் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் அவரின் வீட்டிற்கு வந்து தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.