மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புள்ளி மானை சிறைபிடித்த கிராம மக்கள்.. தூதுபுறவாக சமாதானத்திற்கு வந்த வனத்துறையினர்..! நடந்த சம்பவம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை, திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அடக்கம கிராமத்தில் அவரை, தக்காளி போன்ற விவசாய பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த கிராமம் காட்டுப் பகுதியை ஒட்டி இருப்பதால் மான், காட்டுப்பன்றி, யானை போன்ற காட்டு விலங்குகளால் பயிர்கள் அதிகம் சேதப்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று அடக்கம கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள், கொம்பு மான்கள் அந்த கிராமத்தில் உள்ள தக்காளி தோட்டத்தில் தக்காளிகளை தின்றுள்ளது. இதை பார்த்த அந்த கிராமத்து விவசாயிகள் மான்களை துரத்தி சென்றனர். அப்போது நாய் ஒன்று புள்ளிமானை விரட்டிச் சென்று கடித்ததால் புள்ளிமான் காயமடைந்து கீழே விழுந்தது. இதையடுத்து காயமடைந்த மானை மீட்டு கட்டி வைத்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை பிடித்துச் செல்ல முயன்றனர். அப்போது விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் ஈஸ்வரி முத்தரசன் ஆகியோரும் வனத்துறையிடம் வலியுறுத்தினர்.
பிறகு வனத்துறையினர் உயரதிகாரியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த கிராமத்து விவசாயிகள் மானை வனத்துறையினர் துறையினரிடம் ஒப்படைத்தனர்.