ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஆட்டுக்குட்டிக்கு இனாம் ரஸ்க்.. காசு கேட்ட பெண்ணை அடிக்க உறவுகளை கூட்டிவந்து அட்டகாசம்.!
கடையில் ரஸ்க் பாக்கெட் வாங்கிய பெண்மணி, பணம் தர முடியாது என கூறி கடை ஊழியரை தாக்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு பேக்கரி கடை உள்ளது. இந்த கடைக்கு வருகை தந்த பெண்மணி, ரஸ்க் பாக்கெட்டை வாங்கி கடையின் முன்புறம் இருந்த ஆட்டு குட்டிகளுக்கு கொடுத்து விட்டு, பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.
இதனை கவனித்த கடையில் ஊழியராக பணியாற்றி வரும் பெண்மணி கேட்ட போது, ஆத்திரமடைந்த பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சிறிது நேரத்தில் தனக்கு ஆதரவாக பேசி 4 உறவினர்களையும் அழைத்து வந்து இருக்கிறார்.
மேலும், கடையில் இருந்த பெண் ஒருவரையும் அந்தப் பெண்மணி மற்றும் 4 உறவினர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.