மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதை ஆசாமி அட்ராசிட்டி.. கல்லூரி பேருந்தை இடைமறித்து உற்சாக நடனம்.!
விழுப்புரத்தில் உள்ள நேரு சாலையில் கல்லூரி பேருந்தை இடைமறித்த மதுபோதை ஆசாமி, பேருந்துக்கு முன்புறம் நின்று தனது நடன திறமையை வெளிப்படுத்தி அடாவடி செய்தார். அவ்வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர் மதுபோதை ஆசாமியை சாலையில் இருந்து அகற்ற முயற்சி செய்கிறார்.
ஆனால், குடிகார ஆசாமியோ அவரை விலக்கிவிட்டு நடனத்தில் குறியாக இருக்க, ஒருவழியாக குடிகார ஆசாமி சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து கல்லூரி பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.