மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏரிக்கு மீன்பிடிக்க சென்ற 2 பிஞ்சுகள் நீரில் மூழ்கி பரிதாப மரணம்.. கண்ணீரில் துடிக்கும் பெற்றோர்கள்.!
பெற்றோர்கள் இல்லாமல் தன்னிச்சையாக மீன் பிடிக்க எண்ணி ஏரிக்கு சென்ற 2 சிறார்கள் நீரில் மூழ்கி பலியான சோகம் செஞ்சி அருகே நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரின் மகன் மோகன் ராஜ் (வயது 8). இதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் தாஸ் (வயது 6). சம்பவத்தன்று சிறுவன் மோகன் ராஜுடன், தாஸ் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பதறிப்போன பெற்றோர், ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது, குழந்தைகள் இருவரும் தாங்கல் ஏரியில் உயிரிழந்து சடலமாக மிதந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், இந்த விஷயம் தொடர்பாக வளத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தனியாக நீர் நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.