மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேடுகெட்ட பெரியம்மாவும், அப்பாவி சிறுமியும்... "அந்த 9 பேரால்" கொடூரம்.. விசாரணையில் பரபரப்பு தகவல்.!
செஞ்சியில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் பல பரபரப்புத் தகவல்கள் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி, தாய் - தந்தையை இழந்து தனது பெரியம்மாவின் கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த சிறுமி, தற்போது விழுப்புரத்தில் உள்ள பெரியம்மாவின் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட சிறுமியை, அவரின் பெரியம்மா முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமியுடன் உடனிருந்த பெரியம்மா, சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். விசாரணையில், பெரும் அதிர்ச்சியாக சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கு அவரின் பெரியம்மாவே உடந்தையாக இருந்தது அம்பலமானது.
அந்த ஊரைச் சார்ந்த மண்ணாங்கட்டி என்ற வெங்கடேசன் (வயது 77) என்பவருடன், சிறுமியின் பெரியம்மாவுக்கு கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்துள்ளது. சிறுமியின் பெரியம்மாவை அவ்வப்போது சந்திக்க வந்து சென்ற மண்ணாங்கட்டி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சிறுமியின் பெரியம்மாவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட நிலையில், மண்ணாங்கட்டியிடம் அவ்வப்போது பணம் வாங்கியும் வந்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்து கொண்ட பெரியம்மாவின் மகனான சிறுமியின் அண்ணன், தனது தங்கையை காப்பாற்ற முயற்சிக்காமல், அவனும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், தாயுடன் தனது நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறான். இந்த கொடூரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று சிறுமி தெரியாமல் விழிபிதுங்கி இருந்த நிலையில், கர்ப்பமாக இருப்பதும் அவருக்கு தெரியவில்லை.
இதனால் சிறுமியின் உடல் நலம் குன்றியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்றபோது உண்மை அனைத்தும் அமபலமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக 9 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.