மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்: காரணம் என்ன?.. விபரம் இதோ.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், விவசாய பொருட்களை அரசிடம் நேரடியாக விவசாயிகள் வழங்குவதற்காக அரசின் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.
செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலரும், தங்களின் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வழங்கி அதற்கான தொகையை பெற்றுச்செல்வார்கள்.
இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எதிராக தற்போது தமிழ்நாடு அரசின் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களிடையே எதிர்ப்பை சந்தித்து இருக்கிறது.
அதற்கு இன்று எதிர்ப்பு தெரிவித்து, நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. அதாவது, வழக்கறிஞர் சக்தி ராஜன் தலைமையில், அரசு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எதிர்புறம் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின் அப்பகுதி வழியே சென்ற பொதுமக்களுக்கு அரசின் செயல்பாடுகளை பாராட்டி இனிப்பு வழங்கி நூதன முறையில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.