மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏரி மணல் கொள்ளையை போஸ்டர் அடித்து ஒட்டிய வி.சி.க பிரமுகர் மீது தாக்குதல்.. செஞ்சி அருகே பதற்றம்..!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மீனம்பூர் கிராமத்தில் இருக்கும் ஏரியில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் வி.சி.க பிரமுகர் போஸ்டர் அடித்து ஒட்டியதாக தெரியவருகிறது.
மணல் எடுப்பது ஊராட்சி மன்ற தலைவரின் மறைமுக ஆதரவோடு, அவரின் மகனால் மேற்பார்வையிடப்படுவதாக தெரியவருகிறது. போஸ்டர் விவகாரம் மணல் திருடும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
— SivaRanjith (@Sivaranjithsiva) December 17, 2022
இதனையடுத்து, ஊராட்சி மன்ற தலைவரின் மகன் மற்றும் அவர் தரப்பு ஆதரவு நபர்கள், மணல் கொள்ளை தொடர்பாக போஸ்டர் அடித்து ஒட்டியவரின் காரை இடைமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.