மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அண்ணா சிலையில் ஆ.ராசா படம்.. கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி செருப்பு மாலை.. விழுப்புரத்தில் பரபரப்பு.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையின் மீது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் போட்டோவை மர்ம நபர்கள் மாட்டியுள்ளனர்.
மேலும், ஆ. ராசாவின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியவாறு சித்தரித்து, அதற்கு செருப்பு மாலையும் அணிவித்துள்ளனர். இதுபோதாதென, அண்ணாவின் சிலை முகத்தை திமுக கொடி கொண்டு மூடி இருக்கின்றனர்.
இந்த தகவல் அறிந்த திமுகவினர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.