திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிரிழந்து 9 பேருக்கு உதவும் 12 வயது சிறுவன்; பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டுக்கள்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், கீழ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 42). இவரின் மனைவி சத்யா (வயது 38). தம்பதிகளுக்கு சாம்பசிவம் என்ற 12 வயது மகன் இருக்கிறார்.
இவர் அனுமந்தை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து மிதிவண்டியில் சென்றவர், இ.சி.ஆர் சாலையை கடக்கும்போது மினி லாரி மோதி விபத்தில் சிக்கினார்.
படுகாயமடைந்த மாணவன் மரக்காணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவன் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரவே, அவரின் உடலில் இருந்த 9 பாகங்கள் மருத்துவரால் எடுக்கப்பட்டது.