பங்காளி சண்டையில் பாமக நிர்வாகி கொடூர கொலை.. இரத்த வெள்ளத்தில் மிதந்து பறிபோன உயிர்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!



Viluppuram PMK Supporter Murder

 

பொது இடத்தில் மண் எடுப்பது தொடர்பாக பங்காளிகளுக்குள் நடந்த சண்டையில் பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காப்பியாம்புலியூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யன். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் பனையூரில் இருந்து விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் தனது ஊருக்கு சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, ஆதித்யனை ஊருக்கு ஒரு கிலோமீட்டர் முன்பே வழிமடக்கிய 5 பேர் கொண்ட கும்பலானது, கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களால் அவரின் மார்பு, கழுத்து பகுதிகளில் குத்தி இருக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த ஆதித்யனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். 

அவர் துள்ளத்துடிக்க இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததை உறுதிசெய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன மக்கள் விக்கிரவாண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆதித்யனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Viluppuram

இதற்கிடையில், ஆதித்யன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிகழ்விடத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினரும் வந்து குவிந்ததால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், ஆதித்யனுக்கும், அதே ஊரில் வைத்து வரும் அவரது பங்காளி லட்சுமி நாராயணனுக்கும் இடையே பொது இடத்தில் மண் எடுப்பது குறித்து தகராறு நடந்துள்ளது. இந்த தகராறில் சம்பவத்தன்று ஆதித்தனை பங்காளி கூலிப்படை ஏவி கொலை செய்தது அம்பலமானது. இதனால் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.