மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல பென்சில் கம்பெனியில் வீட்டிலிருந்து வேலை என விளம்பரம் வருகிறதா?.. உஷார் மக்களே.. காவல்துறை விடுத்த எச்சரிக்கை.!
சைபர் குற்றங்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களை நூதன முறையில் கொள்ளையடிக்க நேரடியாகவும், இணையவழியிலும் மர்ம நபர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முகநூல், வாட்சப் போன்ற பல செயல்களின் வழியே மோசடிகள் தொடருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பிரபல பென்சில் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடி வேலை என இணையத்தில் போலியான விளம்பரம் உலா வருகிறது. அதனை நம்பி ஏமாற வேண்டாம். அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பருக்கு / லிங்க் வடிவிலான மெசேஜை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.