மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்வில் பிட்-அடித்து சிக்கிய மாணவி: தனியார் பள்ளி நிர்வாகத்தின் கடுமையான கண்டிப்பால் தூக்கில் தொங்கிய பரிதாபம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவி தேர்வில் பார்த்து எழுதி சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது.
இதனால் மாணவியின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், மாணவியின் செயலை கடுமையாக கண்டித்து, டிசியை கிழித்து அனுப்பிவிடுவோம் என கூறியுள்ளது.
இது மாணவிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தவே, அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், 5 ஆசிரியர்களுக்கு எதிராக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.