மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு நூதன கண்டனம்; தலையில்லா முண்டத்தை சவுக்கால் அடித்து குறைகூறி விசித்திரம்.!
விழுப்புரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன். இவர் தனது பிறந்தநாளையொட்டி அரசு கட்டிடங்கள், சாலை சந்திப்புகள் என பல்வேறு இடங்களில் பேனர்களை வைத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவினை மீறி ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை சமூக ஆர்வலர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் பிரகாஷ் சிறைவாசி என்பவர் புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் அளித்தும் எந்த பலனும் இல்லாத காரணத்தால், ஆதங்கப்பட்டு சமூக ஆர்வலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்களை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினார்.
அதாவது, தனது கோரிக்கைகளை அவர் தலையில்லா முண்டத்திடம் கூறி அதனை சவுக்கால் அடிப்பது போன்ற போராட்டம் நடத்தினர். இதுகுறித்த விடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.