மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவு உண்ணாமல் இருந்த விஜயகாந்தின் தீவிர ரசிகர் மரணம்: இறுதிச்சடங்கை டிவியில் பார்த்தவாறு பறிபோன உயிர்.!
நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலகுறைவால் தனது 71 வயதில் காலமானார். அவரின் மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவை அறிந்து சோகத்தில் இருந்த தேமுதிக நிர்வாகி மயங்கி விழுந்து மரணமடைந்த சோகமும் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியை சார்ந்தவர் விஜயகுமார். இவர் விஜயகாந்தின் தீவிர ரசிகர் ஆவார்.
தேமுதிக கழகத்திலும் நிர்வாகியாக இருக்கிறார். இந்நிலையில் விஜயகாந்தின் மறைவால் கடந்த இரண்டு நாட்களாகவே சரிவர உணவு எடுத்துக்கொள்ளாமல் சோகத்திலேயே இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஆறுதல் கூறியும் பலனில்லை.
இந்நிலையில் நேற்று விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை வீட்டில் இருந்தவாறு டிவியில் பார்த்துக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.