மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெஞ்சு வலியால் துடிதுடித்த மூதாட்டி பரிதாப பலி..!
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் மூதாட்டி நளினா (வயது 62). மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், அவர் தனியே வசித்து வந்துள்ளார்.
மூதாட்டிக்கு மாரடைப்பு
இந்நிலையில், மே 23ம் தேதியான நேற்று, மூதாட்டிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினரிடம் உதவி கோரியுள்ளார். உடனடியாக அவர்கள் மூதாட்டியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: மக்களுக்கு மோர், குடிமகன்களுக்கு பீர்; சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அதிகரித்த பீர் விற்பனை.!!
காவல்துறை விசாரணை
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை நடத்திய நிலையில், மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.!