மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்க வீட்டு பொண்ண காதலிச்சு இழுத்துட்டு போய்ட்டியா?.. காதலனின் தாயை நொறுக்கியெடுத்த பெண் வீடு.!
காதல் பிரச்சனையில் காதலனின் தாயாரை பெண் வீட்டார் மின்கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் சக்திசிவா - புவனேஸ்வரி. இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் எதிர்ப்பு காரணமாக காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறது.
இந்நிலையில், சக்தி சிவாவின் வீட்டிற்கு சென்ற புவனேஸ்வரியின் தாயார் சுதா மற்றும் அவரின் உறவினர்கள், சக்தி சிவாவின் தாயார் மீனாட்சியை வீதிக்கு இழுத்து வந்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கி இருக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மீனாட்சியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரை தாக்கியதாக சுதா, அவரின் உறவினர்கள் என 14 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.