மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 வயது பெண்மணி 5 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கயவர்களின் மீது அதிரடியாக பாய்ந்த குண்டாஸ்.!
அருப்புக்கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண்மணி, கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாலவநத்தம் கிராமத்தில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து ஊருக்கு செல்ல இரவு நேரத்தில் பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.
அந்த சமயத்தில், அவ்வழியே காரில் வந்த உறவினர் முத்துசெல்வம் பெண்ணை அழைத்து தானும் ஊருக்கு செல்வதாகவும், நான் ஊரில் கொண்டு சேர்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பெண்ணும் அவருடன் பயணம் செய்த நிலையில், கோபாலபுரம் சாலையில் சென்றபோது இவர்களை 5 பேர் கும்பல் வழிமறித்துள்ளது.
கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் முத்துசெல்வத்தை தாக்கிய கும்பல், பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். இவர்கள் 5 பேர் சேர்ந்து பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த துயரம் அருப்புக்கோட்டை பகுதியில் அதிர்வலையை ற்படுத்தியது.
இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெண்ணை பலாத்காரம் செய்தது கோவிலாங்குளம் முன்னாள் இராணுவ வீரர் சீனிவாசன், ராம் குமார், ஜெயக்குமார், பிரபாகரன் மற்றும் விஜய் என்பதை உறுதி செய்தனர். இவர்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவர்களின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.