மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாயல்குடி கடற்கரையில் மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்: கைது நடவடிக்கையில் அரிவாள் வெட்டு.. கயவனின் கால்கள் உடைந்தது.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, தனது காதலர் ஹரி கிருஷ்ணன் என்பவருடன் கடந்த 23 ஆம் தேதி சாயல்குடி, மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு, பத்மஸ்வரன், அஜித், தினேஷ் குமார் என்ற 3 வாலிபர்கள் காதல் ஜோடியிடம் தகராறு செய்த நிலையில், அவரை கட்டிப்போட்டு கண்முன்னே காதலியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்துபோன ஹரிகிருஷ்ணன் மறுநாள் காலையில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் உயிரை காப்பாற்றிவிட, கல்லூரி மாணவி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீருடன் புகார் அளித்தார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி, கயவர்களை கைது செய்ய கமுதி குண்டுகுளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பத்மஸ்வரன் மற்றும் தினேஷ் குமாரை கைது செய்ய முயற்சித்தபோது, அவர்கள் அதிகாரிகளை அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது, வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்து இருவரும் கால்களை உடைத்துக்கொண்டனர்.
எதிரிகளின் தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரிகள் நவநீத கிருஷ்ணன், கருப்பசாமி கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். குற்றவாளிகள் பத்மஸ்வரன், தினேஷ் குமாரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள அஜித்தை கைது செய்ய தனிப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.