#Accident: அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து, நின்ற லாரி மீது மோதி கோர விபத்து.. உடல் நசுங்கி., 2 பேர் பலி., 14 பேர் படுகாயம்.!



virudhunagar-aruppukottai-omni-bus-lorry-collision-2-di

டயர் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேக ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், டயரை மாட்டிக்கொண்டு இருந்த லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி நகரில் இருந்து உப்பு லோடு ஏற்றிய லாரி சென்னைக்கு சென்றுகொண்டு இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மதுரை - தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் செல்கையில் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. இதனையடுத்து, லாரியை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர், அதனை மாற்றிக்கொண்டு இருந்துள்ளார். 

திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 36 பயணிகளுடன் இதே சாலையில் அதிவேகமாக ஆம்னி பேருந்து சென்றுகொண்டு இருந்த நிலையில், பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது. ஆம்னி பேருந்தை பின்தொடர்ந்தவாறு வந்த கார், ஆம்னி பேருந்துக்கு பின்புறம் மோதியுள்ளது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், லாரி டயருக்கு அடியில் இருந்த லாரி ஓட்டுநர் சித்தையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆம்னி பேருந்து பயணிகள் மற்றும் காரில் இருந்தவர்கள் என 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பிற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

Virudhunagar

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு & மீட்பு படையினர் அவசர ஊர்தி உதவியுடன் அனைவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஆம்னி பேருந்து பயணியான தூத்துக்குடியை சேர்ந்த ரவி (வயது 40) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

படுகாயத்துடன் பாதிக்கப்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர் உதயக்கனி, பேருந்து பயணி தங்க மாரியப்பன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிற 12 பேர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடபிராக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.