மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி வளாகத்தில் சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.. சிறைபிடித்த ஊர்மக்கள்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தனபாலன் (வயது 57). இவர் காரியாபட்டி நாகனேந்தல் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2008ல் இருந்து ஆசிரியராக தனபாலன் வேலை பார்த்து வந்துள்ளார்.
பள்ளியில் தற்போது 40 மாணவ-மாணவியர்கள் படித்து வரும் நிலையில், தனபாலன் மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10ம் தேதியில் தனபாலன் பள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகளை சைக்கிள் நிறுத்தத்திற்கு அழைத்து சென்று செல்போனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அதே நேரத்தில் வகுப்பில் மாணவர்கள் கூச்சலிட்டு கொண்டு இருந்ததால், 5ம் வகுப்பு மாணவி அதனை தனபாலிடம் தெரிவிக்க வந்துள்ளார். அச்சமயம் தனபால் செல்போனில் ஆபாச படம் காண்பித்ததை கண்டு அதிர்ச்சியடைந்து செல்போனை பறித்து இருக்கிறார். இம்முயற்சியில் செல்போன் உடைந்துள்ளது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவிக்க, ஊர் மக்களிடம் விபரம் தெரிவிக்கப்பட்டு அனைவரும் ஒன்று திரண்டு தனபாலை சந்தித்துள்ளனர். அவர் தெரியாமல் செய்துவிட்டேன் மன்னியுங்கள் என்று கதற, விஷயம் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுடைய பெற்றோரின் புகாரை பெற்று, போக்ஸோ சட்டத்தின் கீழ் தனபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.