மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாய பெண் பணியாளர்கள் மீது மோதி விபத்திற்குள்ளான கார்; ஒருவர் பலி., 4 பேர் படுகாயம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றாபுரம் பகுதியில் விவசாய பணிகள் நடைபெற்றன. இப்பணிக்காக முருகனேரி பகுதியை சேர்ன்ஹட்ட 10 பெண்கள் வந்திருந்தனர்.
இவர்கள் நேரு மாலை பணிகளை முடித்துவிட்டு, சாலையோரம் இருந்த பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு இருந்தனர்.
அச்சமயம், விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த ராஜ்குமார், அழகாபுரி பகுதியில் இருந்து விருதுநகர் நோக்கி காரை இயக்கினார்.
கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்கவே, பெண்களின் மீது மோதி விபத்திற்குள்ளாகியது.
இந்த விபத்தில் முத்துச்செல்வி (வயது 45) நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். செல்வவதி (வயது 55), பேச்சியம்மாள் (வயது 54), பாண்டியம்மாள் (வயது 40), பாப்பா (வயது 50) படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராஜ்குமாரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.