திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
17 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; காதல் கணவர் மீது போக்ஸோ; அறியாத வயதில் சட்டம் தெரியாததால் காப்பு.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான தம்பதியின் மகளுக்கு 17 வயது ஆகிறது. இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். அடுத்த ஆண்டில் அவர் 10ம் வகுப்பு செல்கிறார்.
இந்நிலையில், வீட்டில் தனியாகி யிருந்த சிறுமியை, உறவினரான கருப்பசாமி (வயது 29) என்பவர் காதலிப்பதாக கூறி இருக்கிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருணம் செய்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே, 17 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பிணியானதால், வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியும் விழுப்புரம் குழந்தைகள் நல விடுதியில் ஒப்படைக்கப்பட்டார்.