மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
65 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய புலம்பெயர் தொழிலாளி: அரிசி ஆலையை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், தளவாய்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரிசி ஆலையில் 65 வயது மூதாட்டி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், மூதாட்டியிடம் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர் அத்துமீறியதாக தெரியவருகிறது. இதனால் அவரின் எலும்பு உடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மூதாட்டி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மூதாட்டியின் உறவினர்கள், அரிசி ஆலை முன்பு திடீர் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.