மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்ததில் தகராறு? இளைஞர் அடித்தே கொலை.. இராஜபாளையத்தில் பரபரப்பு.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், துரைசாமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் தற்போது வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள இரயில்வே மேம்பாலம் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்க்கிறார்.
இந்நிலையில், நேற்று அவர் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தபோது, 3 பேர் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். பின் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இராஜை நகர தெற்கு காவல் நிலைய அதிகாரிகள், சரவணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் சரவணகுமார் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது தெரியவந்துள்ள காரணத்தால், தொழில் போட்டியில் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பாண்டி, அழகுராஜ் உட்பட மூவரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், அவர்களை தேடி வருகின்றனர்.