#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ராங் ரூட்டில் பாய்ந்த கார்.. 2 இளம்பெண்கள், மூதாட்டி உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலி..!
மகளின் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தாய் உட்பட 3 பெண்கள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் பகுதியில் வசித்து வருபவர் தங்கசாமி (வயது 67). இவரின் மனைவி மங்கையற்கரசி (வயது 64). இவர்களின் பேரன் பிரதுன் (வயது 7), உறவினர்கள் பூஜா (வயது 20), ரஞ்சனா (வயது 20). இவர்கள் ஐவரும் காரில் இராஜபாளையத்தில் இருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள நாவல்பட்டியில் இருக்கும் தங்கசாமியின் மகள் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தனர்.
இன்று மாலை நேரத்தில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி செவந்தம்பட்டி பகுதியில் கார் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பை தாண்டி சென்று, எதிர்திசைக்கு சென்று அவ்வழியே வந்த காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு வாகனமும் அப்பளம்போல நொறுங்க, விபத்திற்குள்ளான காருக்கு பின்னால் வந்த காரும் விபத்தில் சிக்கியது. விபத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி வைத்தனர்.
மேலும், விபத்தில் நிகழ்விடத்திலேயே பலியாகிய மங்கையற்கரசி, ரஞ்சனா, பூஜா, இன்னொரு காரில் பயணம் செய்த பத்மா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.