மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை; காரணம் என்ன?.. சோகத்தில் குடும்பத்தினர்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், தளவாய்புரம் கீழ பஜார் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். மாரியப்பனுக்கு ஹரிஹரன் என்ற மகன் இருக்கிறார்.
இவர் திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ முதல் ஆண்டு பயின்று வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு வழக்கம்போல சென்றவர், வீட்டிற்கு திரும்பியபின் அமைதியாகவே இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, மாரியப்பன் வியாபாரத்தை கவனிக்க கடைக்கு சென்றுவிட, ஹரிஹரன் வீட்டின் முதல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டிற்கு வந்தவர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிஹரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.