மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்சி மாறுனா கால்களை வெட்டுவேன்.. அதிமுக பிரமுகர், கைதின் போது கால்களை முறித்துக்கொண்ட சோகம்.!
கட்சிக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அரசியல் பிரமுகர், காவல் துறையினர் கைது நடவடிக்கையின் போது தப்பி செல்ல முயற்சித்து கால்களை உடைத்துக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகரில், கடந்த 28 ஆம் தேதி அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதாவது, அதிமுக கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு யாரேனும் சென்றால், அவர்களை வீடு தேடி வந்து கால்களை வெட்டுவேன் என்று தெரிவித்து இருந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்படவே, அவரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காவல் துறையினர் கைது செய்துவிடுவார்கள் என்ற தகவலை அறிந்த சண்முக கனி தலைமறைவாகவே, தனிப்படை காவல் துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டில் பதுங்கி இருந்தவரை கைது செய்ய காவல் துறையினர் முயன்ற போது, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் மாடியில் இருந்து கீழே குதித்து சண்முக கனி தனது கால்களை உடைத்துக்கொண்டார்.