மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயிற்று வலி குறையவேயில்லை - மதுவில் விஷம் கலந்துகுடித்த கூலித்தொழிலாளி தற்கொலை.!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர், என். வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசிங்கராஜ் (வயது 48). இவர் கட்டிட பணிகள் செய்யும் கூலித்தொழிலாளி ஆவார்.
மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்ட ஜெயசிங்கராஜுக்கு வயிற்று வலி பிரச்சனையும் இருந்துள்ளது. இதற்காக எடுத்தும் வலி சரியாகவில்லை.
இதனால் ஒருகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயசிங்கராஜ், மதுவில் விஷம் கலந்துகுடித்து மயங்கி கிடந்துள்ளார். கணவரை மயக்க நிலையில் மீட்ட மனைவி சகுந்தலாதேவி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தார்.
ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சாத்தூர் தாலுகா காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.