மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயிற்று வலி பொறுக்க முடியாமல் 23 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. தீரா வியாதியால் மனமுடைந்து சோகம்.!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர், சின்னகாமன்பட்டி காலனி தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 50). இவர் பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவரது மகன் வசந்தகுமார் (வயது 23). டிப்ளமோ பயின்றுவிட்டு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர், வயிற்றுவலி பொறுக்க இயலாது சம்பவத்தன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.