திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி வாகனத்தால் சோகம்; இருசக்கர வாகனத்தில் சென்ற 15 வயது சிறுவன் பலி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சத்திரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கெளதம் (23), சரண்ராஜ் (22), மனோஜ் (வயது 15).
இவர்கள் மூவரும் இன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடையில் டீகுடிக்க சென்றுள்ளனர். பின் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அச்சமயம் தனியார் கல்லூரி வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதற்கு முன் மேற்கூறிய நண்பர்களின் வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூவரில், 15 வயதுடைய மனோஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.