மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மர்ம காய்ச்சலால் வாந்தி எடுத்து உயிரைவிட்ட மாணவர்: விருதுநகரில் சோகம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). டெயிலராக வேலை பார்த்து வருகிறார். முருகனின் மகன் சக்திவேல் (வயது 17).
இவர் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே மாணவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை சிறுவன் வாந்தி எடுத்து மயங்கியதாக தெரியவருகிறது. அவனை உடனடியாக மீட்டு பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், மகனின் உடலை கட்டியணைத்து கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.
இந்த விஷயம் தொடர்பாக சாத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.