மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரதட்சணை கொடுமையால் பெண் சிலிண்டரை வெடிக்கவைத்து தற்கொலை முயற்சி?.. விருதுநகரில் பேரதிர்ச்சி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், வெம்பக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவரின் மகள் ரேவதி (வயது 25). இவர் மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சிப்பிப்பாறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.
செல்வராஜுக்கும் - ரேவதிக்கும் கடந்த 2020 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இரு குடும்பத்தார் இடையே வரதட்சணை தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக தெரியவருகிறது.
இந்த விஷயம் குறித்து ரேவதியின் தாய் விஜயலட்சுமி மருமகனின் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். இதற்கிடையில், சம்பவத்தன்று ரேவதி தனது தாயாரிடம் பதற்றத்துடன் பேசிய நிலையில், சிறுது நேரத்திற்குள்ளாக அவரின் செல்போனும் ஸ்விச் ஆப் ஆகியுள்ளது.
இதனால் விஜயலட்சுமி பக்கத்து வீட்டில் வசித்து வருவோரை தொடர்பு கொண்டு பேசிய சமயத்தில், ரேவதி சிலிண்டர் வெடித்து படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். பதறிப்போன பெண்மணி மகளை மதுரை அரசு மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து விஜயலட்சுமி சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் செல்வராஜ், அவரின் தாயார் கல்யாணி ஆகியோரின் மீது வழக்குபதிந்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.