#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதுபோதையில் சிகிரெட் பிடித்து, வீட்டில் பற்றிய தீ.. புகைவிட்டருக்கு எமனான சாவுமணி அடித்த புகை..!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், மஞ்சப்பூ தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 13 வருடம் ஆகும் நிலையில், 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சரவணனின் மனைவி கணவரை பிரிந்து சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றுவிட்ட நிலையில், சரவணன் தான் ஜோதிடம் பார்க்கும் இடத்திலேயே தங்கியிருந்து வந்துள்ளார். மேலும், மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மதுபோதைக்கும் அடிமையாகி இருக்கிறார். நேற்று அவரின் வீட்டின் உள்ளே இருந்து புகை வந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் சரவணன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த அதிகாரிகள் சரவணன் இறந்துவிட்டதை உறுதி செய்ததை தொடர்ந்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிரெட் நெருப்பால் வீடு தீப்பிடித்து, போதையில் உறங்கிய சரவணன் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.