திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குளத்துக்குள் குளித்தபோது நீரில் மூழ்கி 60 வயது முதியவர் மரணம்; ஸ்ரீவில்லிபுத்தூரில் சோகம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கநாதபுரம் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சுப்பையா (வயது 60). இவர் சிவகாசியில் சைக்கிள் ரிக்சா ஓட்டி வருகிறார்.
நீரில் விழுந்து தத்தளிப்பு:
இந்நிலையில், திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திருமுக்குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தபோது, சுப்பையா எதிர்பாராத விதமாக நீரில் விழுந்து தத்தளித்துள்ளார்.
அதிகாரிகள் வருவதற்குள் நடந்த சோகம்:
அவர் நீரின் ஆழமான பகுதியில் விழுந்து காப்பாற்ற அபயக்குரலிட்டதை கேட்டு வந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் சுப்பையாவின் சடலத்தை மீட்டனர். அவரின் உடல் ஸ்ரீவி நகர் காவல் துறையினரால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.