மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்ரீவில்லிபுத்தூரில் சோகம்.. ஆண்டாள் கோவில் குளத்தில் குதித்து தாய் - மகள் தற்கொலை.! குடும்ப பிரச்சனையால் விபரீதம்.!!
ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தாய் - மகள் குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. மழைநீர் குளத்தில் நிரம்பி காணப்படும். இந்நீரில் அங்குள்ள மக்கள் நீராடி, துணிதுவைத்து செல்வது வழக்கம். இக்குளத்தில் குளிக்க செல்லும் சிறார்கள் அவ்வப்போது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று இறப்பது வாடிக்கையாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலையில் அப்பகுதி மக்கள் குளத்திற்கு சென்றபோது, தண்ணீரில் 2 பெண்களின் உடல் மிதந்து இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண்ணில் ஒருவர் 45 உடையவர், மற்றொருவர் 14 வயது சிறுமி என்பது உறுதியானது.
அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கம்மாபட்டி தெருவில் வசித்து வரும் முனியாண்டியின் மனைவி மகாலட்சுமி (வயது 50), அவரின் மகள் அங்காள ஈஸ்வரி (வயது 14) குடும்ப பிரச்சனை காரணமாக குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.