திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காய்கறி பாக்கி கேட்ட கடைக்காரர் மீது கொலைவெறி தாக்குதல்; கடனாளி பரபரப்பு செயல்..!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசெல்வம். இவர் காய்கறிக்கடை நடத்தி வந்துள்ளார்.
மங்காபுரம் பகுதியை சேந்தவர் பெருமாள். பழனிசெல்வத்தின் கடையில் பெருமாள் காய்கறிகள் கணக்கில் வாங்கி, மாதம் ஒருமுறை பணம் கொடுத்து அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காய்கறிகள் வாங்கிய நிலுவைத்தொகை ரூ.3800 பாக்கி இருந்த நிலையில், அதனை பழனிசெல்வம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத பெருமாள் மற்றும் அவரின் நண்பர் தங்கபாண்டி சேர்ந்து பழனிசெல்வதை அவதூறாக பேசி தாக்கி இருக்கின்றனர்.
இதனால் சம்பவம் தொடர்பாக பழனிசெல்வம் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.