மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அண்ணண் என்னடா, தம்பி என்னடா.?" சொந்த அண்ணனையே வெட்டிக்கொன்ற தம்பிகள்... வெளியான திடுக்கிடும் பின்னணி.!.
விருதுநகர் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக சொந்த தம்பிகளாலையே லாரி டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மூலம் பிறந்த மகனான முருகன்(40) விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். முத்துசாமியின் இரண்டாவது மனைவியின் மகன்களான ஞானகுருசாமி (36), காளிதாஸ் (33) ஆகியோருக்கும் முருகனுக்குமிடையே அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்திருக்கிறது.
இதன் காரணமாக ஞான குருசாமி மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் முருகன் மீது தீராத பகையில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம் ஜீவா நகர் பகுதி அருகே முருகன் தனது மனைவியுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ஞான குருசாமி மற்றும் காளிதாஸ் இருவரும் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இச்சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஞான குரு சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய காளிதாசை தீவிரமாக தேடி வருகிறது காவல்துறை.