திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
'டேய் நிப்பாட்ரா' நீ பேசுறதே சரியில்ல., திருமாவளவனுக்கு எதிராக மலேசியாவில் வெடித்த குரல்.!!
பதினோராவது ஆண்டு உலகத் தமிழர் தேசிய மாநாடு மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார். அப்பொழுது மேடையில் அவர் தமிழ் தேசியம் குறித்து பேசினார். அதில் தமிழ் தேசியம் என்ற பெயரில் மதவாதம், இனவாதம் கூடாது என்று கூறியிருந்தார்.
அப்படி அவர் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கிய சில நொடிகளில் 'டேய் நிப்பாட்ரா' என்று திருமாவளவனுக்கு எதிராக சிலர் குரல் எழுப்பினர். 'நீ பேசிய தலைப்பே சரியில்லை' என்று அவரை சத்தம் போட்டு பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
அதன் பின்னர் விழா ஏற்பாடு செய்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்த முற்பட்டார்கள். பின்பு திருமாவளவன் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்.
சிறிது சலசலப்புகளுடன் மாநாட்டின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் திருமாவளவன்.