திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செல்பிக்காக திருமாவளவனை சூழ்ந்த தொண்டர்கள்.! அப்புறம் என்ன பண்ணாரு தெரியுமா.?
சேலத்தில் விநாயகர் குழுமம் பிரபலமான தொழில் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் குடும்பத்தில் திருமண வரவேற்பு விழா ஒன்று நடைபெற்றது. அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
முதலில் மணமக்களை வாழ்த்தி பேசிவிட்டு, அதன் பிறகு அங்கிருந்து திருமாவளவன் கிளம்ப முயற்சி செய்தபோது, திடீரென்று தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதன் காரணமாக, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு அவரை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள் பலர் அவருடன் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட திருமாவளவன் தொண்டர்களை அமைதிப்படுத்தி, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால், அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்ட திருமாவளவன், அதன் பிறகு தொண்டர்களை சமாதானப்படுத்தி, அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு தெரிவித்தார். பின்பு அவருடைய பேச்சுக்கும் மதிப்பு கொடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.